இந்திய பாதுகாப்பு அமைச்சின் இணைச் செயலாளர் பிரபாகர் மற்றும் அவரது கடற்படைக் குழுவினர் நேற்றையதினம்(09) திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் மரியாதை நிமித்தமாக வருகைதந்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இச்சந்திப்பில், திருகோணமலை துறைமுகத்தில் கப்பல் கட்டும் தளம் ஒன்றை நிறுவுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டது.
திருகோணமலை துறைமுகத்தை மேம்படுத்துவதன் ஊடாக வங்காள விரிகுடாவில் பயணிக்கும் கப்பல்களுக்கு அவசர நிலையின் போது விரைவான சேவைகளை வழங்க முடியும் என இந்திய இந்திய பாதுகாப்பு அமைச்சின் குழுவினர் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது.