யாழில் கோர விபத்து : நெல்லைக் காய வைத்தவர் உயிரிழப்பு!

மோட்டார் சைக்கிளில் வந்தவர் மோதியதால் வீதியில் நெல் பரவிக்கொண்டிருந்தவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம் கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் மந்திகையை அண்மித்த பகுதியில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவரின் சடலம் மந்திகை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில், மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Leave a Reply