கடந்த 8 நாட்களில் 60,122 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை..!samugammedia

பெப்ரவரி மாதம் முதல் 8 நாட்களில் 60,122 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை வந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன்படி இந்த ஆண்டு இதுவரை 268,375 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.  

மேலும் சுற்றுலாப் பயணிகளில் அதிகளவானோர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளதுடன் அதன் எண்ணிக்கை 42,768 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன்,  ரஷ்யாவில் இருந்து 39,914 சுற்றுலா பயணிகளும், பிரித்தானியாவில் இருந்து 22,278 சுற்றுலா பயணிகளும், ஜேர்மனியில் இருந்து 18,016 சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

Leave a Reply