யாழ் நாகர்கோவில் கடற்கரையில் பரபரப்பு…! திடீரென ஒன்றுகூடிய கடற்றொழிலாளர்கள்…!

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர்கோவிலில் இந்த ஆண்டிற்கான நாள் வலை தொழில் இன்றையதினம்(12) சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

மீனவ சம்மட்டிமார்கள், கடற்றொழிலாளர்கள் ஒன்றிணைந்து கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வை ஆரம்பித்தனர்.

தமிழரின் தை மாத நாளின் இறுதி நாளான இன்று வருடாவருடம் இந் நாள் தொழில் ஆரம்பிப்பது வழமையாகும்.

குலுக்கல் முறையில் தெரிவு செய்யப்பட்ட மீனவர் ஒருவர் 09 நாளாக  நாகர்கோவில் நாகதம்பிரானுக்கு விரதம் இருந்து சமய ரீதியான நிகழ்வினை நிறைவு செய்த பின்னர் கரைவலை மீன்பிடி நாள் தின நிகழ்வினை ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply