கழுத்து துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண்..! பொலிஸார் வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

 

பிங்கிரிய பிரதேசத்தில் கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் வீட்டினுள் இருந்த பெண் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பிங்கிரிய, விலத்தவ, கொடெல்லயாய பகுதியைச் சேர்ந்த டர்சி பெர்னாண்டோ என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கழுத்தில் வெட்டுக்காயங்களுடன் பெண் ஒருவர் வீட்டினுள் இருப்பதாக பிங்கிரிய பொலிஸாருக்கு நேற்று தகவல் கிடைத்துள்ளது.

இந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார், காயமடைந்த பெண்ணை 1990 அம்புலன்சில் சிகிச்சைக்காக சிலாபம் பொது மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட பெண் அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர் என  பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Leave a Reply