நாட்டில் கோட்டாபய ராஜபக்சவின் கதியே மீண்டும் ஏற்படும் நிலை..! எச்சரிக்கும் தேரர்

 

இலங்கையில் ஒன்றை சொல்லிவிட்டு இந்தியாவுக்குச் சென்று இன்னொன்றைக் கூறுபவர்களின் கொள்கையில் சிக்கல் இருப்பதாக வண.தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.

அனுபவமில்லாதவர்களிடம் நாட்டை ஒப்படைத்தால், அதிகாரம் வழங்கப்பட்ட கோட்டாபய ராஜபக்சவின் கதியே மீண்டும் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நடைபெற்ற பிக்குகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தம்பர அமில தேரர் மக்கள் விடுதலை முன்னணியுடன் மிக நெருக்கமாக செயற்பட்டு பின்னர் அதிலிருந்து விலகியமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply