நள்ளிரவில் மாயமாக மறையும் முக்கிய பொருட்கள்…! காவல்துறையினர் விடுத்த எச்சரிக்கை …!samugammedia

நாடளாவிய ரீதியில் இரவு நேரங்களில் வீடுகளுக்குள் புகுந்து பொருட்களை திருடும் கும்பல் தொடர்பில் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இச்சம்பவத்துடன் தொடர்புடைய  கும்பல்களை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வாகனங்களின் உதிரிப் பாகங்களை திருடுவதில் இக்குழுவினர் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், செல்லப் பிராணிகளுக்கு விஷம் கொடுத்து இந்த கும்பல் இந்த திருட்டில் ஈடுபடுவதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

நள்ளிரவு நேரங்களில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துள்ளதுடன் இது குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு காவல்துறையினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Leave a Reply