கடையில் பணிஸ் வாங்கியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

அனுராதபுரத்தில் உள்ள கடை ஒன்றில் பனிஸ் வகை ஒன்றை கொள்வனவு செய்தவர்கள் அதில் பல்லி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.

இந்த சம்பவம் குறித்து இப்பலோகம பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டு தெரியவந்ததும் கடையின் உரிமையாளர் கல்லஞ்சியாகமவில் உள்ள வீட்டு மாடியில் வேலை செய்து கொண்டிருந்த இருவரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

குறித்த பனிஸை அதே பகுதியைச் சேர்ந்த கொத்தனார் மற்றும் உதவியாளர் ஆகிய இருவரே கொள்வனவு செய்துள்ளனர்.

மேலும், இருவரும் பனிஸ் பாக்கெட்டை சேவை நிலையத்திற்கு எடுத்துச் சென்று அதை சாப்பிடுவதற்காக ஒரு துண்டை உடைத்து பார்த்துள்ளனர்.

அப்போது, அதில் பல்லி கண்டுபிடிக்கப்பட்டதனையடுத்து இப்பலோகம பொது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயத்திற்கு முறைப்பாடு செய்துள்ளனர்.
இந்த நிலையில் தாக்குதலுக்குள்ளான இருவரும் தாக்கப்பட்டமை தொடர்பில் இப்பலோகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர்.

இது குறித்து இப்பலோகம பொது சுகாதார அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்தலில், தம்புள்ளை இனாமலுவ பிரதேசத்தில் இயங்கி வரும் இந்த பேக்கரியிலேயே பனிஸ் தயாரிக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

The post கடையில் பணிஸ் வாங்கியவர்களுக்கு காத்திருந்த அதிர்ச்சி! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply