அமைச்சர் ஹரின் பெர்னாண்டோவின் கருத்துக்கு எதிராக விமல் வீரவன்சவும் போர்க்கொடி

இலங்கை இந்தியாவின் ஒரு பகுதி என சுற்றுலாத்துறை அமைச்சர் தெரிவித்த பாரதூரமான கருத்து தொடர்பில் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

பிட்டகோட்டிலுள்ள தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார். 

அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ, இந்தக் கூற்று மட்டுமல்ல,’எங்கள் விமான நிலையங்கள், துறைமுகங்கள் போன்ற அனைத்தையும் இந்தியாவுக்குக் கொடுப்போம்’ என்றும் வெட்கப்பட்டு வேடிக்கையான புன்னகையுடன் கூறினார்.

எட்கா ஒப்பந்தம் மார்ச் மாதம் கைச்சாத்திடப்பட உள்ளது. எட்கா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகு, இந்தியர்கள் இலங்கையின் சேவைப் பொருளாதாரம், தொழில் சந்தை, வர்த்தகம் ஆகியவற்றில் எந்தவித இடையூறும் இன்றி நுழைய முடியும். அப்படி ஒரு காலகட்டத்திற்குப் பிறகு இந்த நாட்டை இந்தியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாடாக மாற்றலாம்.

மேலும், நமது விமான நிலையங்கள், துறைமுகங்கள், தொலைத்தொடர்பு, மின்சார சபை மற்றும் பிற பொருளாதார மையங்கள் எதிர்காலத்தில் இந்திய நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளன. மேலும், இந்தியாவுடன் எரிசக்தி ஒருங்கிணைப்புக்கு சாலை அமைக்கப்படுகிறது.  என அவர் தெரிவித்தார்.

Leave a Reply