கிங் சார்லஸின் 75வது பிறந்த தின நிகழ்விற்கு கிழக்கு ஆளுநருக்கு விசேட அழைப்பிதழ்…!

கிங் சார்லஸின் 75வது பிறந்த தின நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பிதழ் வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்த ஆளுநர் செந்தில் தொண்டமான், கிங் சார்லஸ் இலங்கை, மலையகத்திற்கு வருகை தந்து அவர் தேயிலை தோட்டத்தில் மலையக பெண்களுடன் கலந்துரையாடிய புகைப்படத்தை பிறந்தநாள் பரிசாக வழங்கி வைத்தார்.

இப்புகைப்படமானது, இந்தியாவிற்கான பிரித்தானிய உயர் ஸ்தானிகர்  அலெக்ஸ் எல்லிஸ் மற்றும் துணை உயர் ஸ்தானிகர் ஒலிவர் பால்ஹாட்செட் ஆகியோரால் பக்கிங்ஹாம் அரண்மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply