பாரவூர்தியுடன் மோதுண்ட ஆட்டோ…! பாடசாலை மாணவிகளுக்கு ஏற்பட்ட கதி…!

பாடசாலை மாணவிகளை ஏற்றிக்கொண்டு பயணித்த முச்சக்கர வண்டியொன்று  பாரவூர்தியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

புரவுன்ஷீக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் இருந்து இன்று காலை பாடசாலை மாணவிகளை ஏற்றி வந்த முச்சக்கர வண்டி மஸ்கெலியா நகருக்கு அருகில் உள்ள சாமிமலை பாலத்தை அன்டிய பகுதியில் பாரவூர்தியுடன் மோதுண்டு  விபத்துக்குள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் முச்சக்கர வண்டியில் பயணம் செய்த மாணவிகள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதி  காயமடைந்த நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.எஸ்.புஸ்பகுமார தெரிவித்தார்.

Leave a Reply