விடுதலைப்புலிகள் காலத்தில் பெண்கள் சுதந்திரமாக நடமாடித் திரிந்தனர்! சார்ள்ஸ் எம்.பி சுட்டிக்காட்டு

விடுதலைப் புலிகளின் காலத்தில்  வடகிழக்கில் தமிழ்ச் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இருந்தது என  பாராளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் குறிப்பிட்டார். 

நேற்றையதினம் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய  அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த 15 ஆம் திகதி  மன்னார், தலைமன்னாரில் ஒரு கொடூரமான சம்பவம் நிகழ்ந்தது.

10 வயது நிரம்பிய பாடசாலை மாணவியான அன்சியான் கியானுசியா என்ற சிறுமி பாலியல்  

துஸ்பிரயோகம் செய்யப்பட்டு மெல்லிய நூலினால் கழுத்து நெரிக்கப்பட்டு  கொல்லப்பட்டார்.

சம்பவம் தொடர்பில் 52 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தியபோதுஇ நான் பாலியல் துஸ்பிரயோகம்  செய்யவில்லை கொலை மட்டும் தான் செய்தேன் என்று கூறியுள்ளார். 

விடுதலைப் புலிகளின் காலத்தில் தமிழ்ச் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இருந்தது.

1998 ஆம் ஆண்டு 13 வயது சிறுமி ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த ஒருவருக்கு முல்லைத்தீவு காவல்துறை நீதிமன்றில் மரணதண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு, அவர் புதுக்குடியிருப்பு சந்தியில் பொது மக்கள் முன்னிலையில் கட்டி வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

இங்கு  எமது சட்டங்கள் மாற்றியமைக்கப்பட வேண்டும்  என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *