மயிலிட்டியில் சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்பு தெரிவித்து மீண்டும் போராட்டம்..!!

மயிலிட்டியில் சட்டவிரோதமான முறையில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக இன்று மீண்டும் போராட்டம் இடம் பெற்றது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் ஒழுங்கு செய்திருந்த இந்த போராட்டத்தில் அக்கட்சியின் ஆதரவாளர்கள், பொது மக்கள் எனப்  பலர் கலந்து கொண்டிருந்தனர்.

அங்கு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருந்த மக்கள் வடக்குக் கிழக்கு தமிழர் தாயகம் இரைாணுவமே வெளியேறு, தையிட்டி எங்கள் சொத்து, அடக்கு முறைக்கு அடிபணியமாட்டோம், இனப்படுகொலை ராணுவமே வெளியேறு,சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை காவலா?, அபகரிக்காதே அபகரிக்காதே தமிழர் நிலங்களை அபகரிக்காதே ஆகிய பல கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்..

Leave a Reply