வியாபார நிலையத்தில் நின்ற பெண்ணின் சங்கிலியை அறுத்துக் கொண்டு இருவர் தப்பியோட்டம்..!!

வவுனியா – பூந்தோட்டம் பகுதியில் வியாபார நிலையத்திற்கு சென்ற இருவர் குறித்த வியாபார நிலைய உரிமையாளரான பெண் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிசார் இன்று தெரிவித்தனர்.

வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் பெண் ஒருவர் சிறிய வியாபார நிலையம் ஒன்றை நடத்தி வருகின்றார். குறித்த வியாபார நிலையத்திற்கு சென்ற இருவர் பீடி தருமாறு கூறியதுடன், குறித்த பெண் பீடியை எடுத்துக் கொண்டு நின்ற போது அவர் அணிந்திருந்த சங்கிலியை அறுத்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிசார் மேலும் தெரிவித்தனர். 

Leave a Reply