இழுத்தடிக்கும் மைத்திரி – புதிய கூட்டணியின் நியமங்கள் எப்போது? வெளியான தகவல்

பொதுஜன ஐக்கிய முன்னணியின் புதிய நிர்வாகிகள் நியமனம் இந்த வாரத்தில் இடம்பெறவுள்ளதாக கட்சியின் உட்கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அமெரிக்க விஜயத்தின் பின்னர் புதிய அதிகாரிகள் குழு நியமிக்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

எவ்வாறாயினும், முன்னாள் ஜனாதிபதி தனது அமெரிக்க விஜயத்தின் பின்னர் நாட்டுக்கு திரும்பி ஒரு வாரத்திற்கு மேலாகியும், புதிய அதிகாரிகள் குழு நியமனம் இதுவரையில் மேற்கொள்ளப்படவில்லை.

புதிய அதிகாரிகள் எதிர்வரும் வாரத்தில் நியமிக்கப்படுவார்கள் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பொதுஜன ஐக்கிய முன்னணி தலைமையிலான புதிய கூட்டணியின் தலைவர், செயலாளர் நாயகம் மற்றும் பல பதவிகள் இங்கு நியமிக்கப்பட உள்ளன.

எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய கூட்டணியின் கீழ் போட்டியிட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கீழ் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட தீர்மானித்த போதிலும் அதன் செயலாளர் நாயகம் பதவி தொடர்பில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக பொதுஜன மக்கள் ஐக்கிய முன்னணியின் கீழ் புதிய கூட்டணியை கட்டியெழுப்ப தீர்மானித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *