உயர்தரத்தில் தோற்றிய மாணவர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு..!

இவ்வருடம் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுக்கு ஆங்கில மொழி வழிகாட்டல் மற்றும் தொழில்சார் பாடம் ஒன்றை இலவசமாகக் கற்பதற்கு அடுத்த மாதம் ஐந்தாம் திகதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாடளாவிய ரீதியில் 300 நிலையங்களைப் பயன்படுத்தி இந்தப் பயிற்சித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வருடம் கல்விப் பொதுத் தராதரப் பரீட்சை நிறைவடைந்ததன் பின்னர் தோற்றிய மாணவர்களுக்கும் அதே வகையான பயிற்சித் திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

Leave a Reply