இலங்கையில் கொலைக் குற்றங்கள் அதிகரிப்பு..!!

இவ்வருடத்தின் ஒரு மாதக்காலப்பகுதியில் இதுவரை 83 பேர் கொலை செய்யப்பட்டு உயிரிழந்துள்ளதாக   பொலிஸ் ஊடகப் பேச்சாளர் DIG சட்டத்தரணி நிஹால் தல்துவா தெரிவித்துள்ளார்.

இன்று (26) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

மேலும்,  வீடுகளை உடைத்தல் மற்றும் சொத்துக்களை திருடுதல் போன்ற 1,180 வழக்குகள் பதிவாகியுள்ளதாகவும், 310 கொள்ளைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

குற்றச் செயல்களை கட்டுப்படுத்துவதற்கு பொலிஸார் தற்போது பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அத்துடன்  ஜனவரி முதலாம் திகதி முதல் இதுவரை 20 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான சுமார் 10 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் ஈடுபட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *