ஶ்ரீலங்கன் விமானத்தை ஆட்டிப்படைத்த எலி..! நடந்தது என்ன?

 

ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான இரண்டு விமானங்களில் கடந்த  ஞாயிற்றுக்கிழமை (25) எலிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக விமான சேவைகள் தாமதப்படுத்தப்பட்டதாக  ஶ்ரீ லங்கன் விமான சேவையின்  தலைவர் அசோக் பத்திரகே தெரிவித்துள்ளார்.

இதனை,  துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சில்  நேற்று நடைபெற்ற கலந்துரையாடலில் அவர் தெரிவித்தார்.

அத்துடன், எலிகள் காணப்பட்ட இரண்டு விமானங்களுக்கு இரசாயனத்தை தெளிக்க வேண்டியிருந்தது. அத்துடன், தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக ஏனைய இரண்டு விமானங்கள் தாமதமாக சேவையை ஆரம்பிக்க வேண்டியிருந்தது என தெரிவித்துள்ளார்.

எலிகள் எப்படி விமானத்திற்குள் புகுந்தன என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டதா என துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால, கேள்வி எழுப்பினார்.

அத்துடன் 15 ஊழியர்கள் இல்லாததும் காலதாமதத்திற்கு காரணம் என தெரியவந்தது. மூன்று ஊழியர்கள் ஞாயிற்றுக்கிழமை விடுமுறைக்கு விண்ணப்பித்துள்ளனர்.

மீதமுள்ள 12 பேர் சாதாரணமாக விடுமுறையை எடுத்துள்ளனர். விடுமுறைக்கு விண்ணப்பிக்காமல் விடுமுறையை எடுத்தவர்களை பணிநீக்கம் செய்யுங்கள் என்று கோபமடைந்த நிலையில், அமைச்சர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *