வெகுவிமர்சையாக நடைபெற்று முடிந்தது யு.பி.எஸ்.எஸ்.எல் கிரிக்கெட் தொடர் !

இரண்டாவது வருடமாக இலங்கை ஐக்கிய புகைப்பட சங்கம் ஏற்பாடு செய்திருந்த மென்பந்து கிரிக்கெட் தொடர் வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது.

அணிக்கு 8 பேர் கொண்ட இந்த மென்பந்து கிரிக்கெட் போட்டி கடந்த 25 ஆம் திகதி கொழும்பு சாலிகா மைதானத்தில் நடைபெற்றது.

குறித்த தொடரின் அனுசரணையாளர்கள், பரிசு விபரங்கள் மற்றும் கிண்ணத்தை அறிமுகப்படுத்தும் ஊடக சந்திப்பு கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில் வார இறுதியில் நடைபெறு முடிந்த இப்போட்டியில் வெற்றிவாகை சூடிய ட்ரைரோ டிரெடர்ஸ் அணிக்கு வெற்றி கிண்ணமும் 2 இலட்சம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.

மேலும் இந்த தொடரில் இரண்டாவது இடத்தை பிடித்த அணிக்கு ஒரு இலட்சம் ரூபாயும் மூன்றாம் இடத்தை பிடித்த அணிக்கு 50 ஆயிரம் ரூபாயும் பரிசாக வழங்கப்பட்டது.

இதேவேளை போட்டியின் ஆட்டநாயகனுக்கு சென்னைக்கு சென்று வருவதற்கான விமானப் பயன்சீட்டு ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

Leave a Reply