ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் திகதி தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு..!samugammedia

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 18 ஆம் திகதி மற்றும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியினுள் நடைபெறும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் தொடர்பில் அரசியல் கட்சிகளுக்கு தெளிவுபடுத்தும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

தேர்தல் செலவுகளை ஒழுங்குபடுத்தும் சட்டம் குறித்து தெளிவுபடுத்துவதற்காக 40 அரசியல் கட்சிகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு நேற்றையதினம் அழைக்கப்பட்டிருந்தன.

அந்த வகையில், ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார, மக்கள் ஐக்கிய முன்னணி சார்பில் இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி, இரண்டாம் தலைமுறை கட்சியின் தலைவர் உவிந்து விஜேவீர உள்ளிட்ட பல அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply