அதிர்ச்சியில் கொழும்பு மக்கள் – இளநீர் மற்றும் தோடம்பழத்தின் விலையில் ஏற்பட்ட உயர்வு

 

நாட்டில் இந்நாட்களில் நிலவும் அதிக வெப்பநிலை காரணமாக செவ்விளநீர் தேவை அதிகரித்துள்ளமையினால் கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் செவ்விளநீர் ஒன்றின் விலை 200 ரூபாவாக அதிகரித்துள்ளது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் கொழும்பில் செவ்விளநீர் ஒன்றின் விலை 120 முதல் 140 ரூபா வரை இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

இதேவேளை இந்த வாரம் கொழும்பில் தோடம்பழம் ஒன்றின் விலை 120 முதல் 140 ரூபா வரை விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply