உள்ளூராட்சி சபைகளின் கடமைகள் தொடர்பில் மூதூரில் செயலமர்வு…!

“பயனுறுதிமிக்க மக்கள் பங்களிப்பின் ஊடாக உள்ளூராட்சி சபைகளில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக் கூறதல் என்பவற்றை மேம்படுத்தல்”  எனும் தொணிப் பொருளின்கீழ் மூதூர் பிதேச சபையின் கீழுள்ள சனசமூக நிலைய உறுப்பினர்களுக்கான செயலமர்வு இன்று (29) காலை இடம்பெற்றது.

இச் செயலமர்வு இளைஞர் அபிவிருத்தி அகத்தின் ஏற்பாட்டிலும், ஏசியா பவுண்டேசன் அனுசரணையிலும் மூதூர் பிரதேச சபையின் கேட்போர் கூடத்தில் இச்செயலமர்வு இடம்பெற்றது.

இதன்போது உள்ளூராட்சி மன்றங்களின் கடமை, பொறுப்பு மற்றும் சட்டங்கள் தொடர்பாக தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.

இச்செயலமர்வில் வரவேற்புரையை மூதூர் பிரதேச சபையின் செயலாள வீ.சத்தியசோதி வழங்கினார்.திட்ட விளக்கவுரையை இளைஞர் அபிவிருத்தி அகத்தின் மதியுரைஞர் பொன்.சற்சிவானந்தம் செய்தார்.இந்நிகழ்வை மூதூர் பிரதேச சபையின் சனசமூக அபிவிருத்தி உத்தியோகத்தர் நெறிப்படுத்தினார்.

இச்செயலமர்வில் வளவாளராக திருகோணமலை மாவட்ட பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் திரு.பார்த்தீபன் கலந்து கொண்டு தெளிவூட்டல்களை வழங்கியிருந்தார்.   

Leave a Reply