நிறப்பூச்சு தொழிற்சாலையில் பாரிய தீ விபத்து – முற்றாக எரிந்து நாசம்..!

பாணந்துறை வடக்கு, சமகி மாவத்தை பகுதியில் அமைந்துள்ள நிறப்பூச்சு தயாரிக்கும் தொழிற்சாலையில் நேற்று (29) இரவு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த தீ விபத்தில் தொழிற்சாலை முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மொரட்டுவை மாநகர சபையின் தீயணைப்புப் பிரிவினர் தீயை அணைத்துள்ள நிலையில், 

இந்த தீ விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயினால் ஏற்பட்ட சேதம் இதுவரை மதிப்பிடப்படவில்லை என்பதுடன், தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Leave a Reply