கிழக்கு ஆபிரிக்காவில் இடம்பெற்ற கோர விபத்து; இரு இலங்கையர்கள் உயிரிழப்பு..!

கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள தன்சானியாவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் இரண்டு இலங்கையைச் சேர்ந்த இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரு இளைஞர்களும் தன்சானியாவில் தாருஸ் சலாம் நகரிலிருந்து மஹேங்கே நகருக்கு பயணித்துக் கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒருவர்  காலி கொட்டுகொட பகுதியை சேர்ந்த 23 வயதுடையவர் எனவும், 

மற்றையவர் காலி மகுலுவ பகுதியைச் சேர்ந்த 33 வயதுடையவர் எனவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

Leave a Reply