பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதாவின் வீட்டில் மரணம்..

நடிகை சுஜிதா
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர்ஹிட் சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கதையின் நாயகியாக நடித்தவர் சின்னத்திரை நடிகை சுஜிதா.

இவர் தனது சிறு வயதில் இருந்தே நடித்து வரும் இவர் தற்போது தமிழ், தெலுங்கு ஆகிய சீரியல்களில் நடித்து வருகிறார்.

மக்கள் மனதை கவர்ந்த சின்னத்திரை நாயகியாக இருக்கும் நடிகை சுஜிதாவிற்கு சூர்யா கிரண் எனும் ஒரு சகோதரர் இருக்கிறார். இவர் இயக்குனர் மற்றும் நடிகர் ஆவார்.

மரணம்

பிரபல நடிகை காவேரியின் முன்னாள் கணவரான நடிகர் சூர்யா கிரண் இன்று காலை மரணமடைந்துள்ளார். மஞ்சள் காமாலை பாதிப்பின் காரணமாக இவர் உயிரிழந்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா கிரணின் மரணம் அவருடைய குடும்பத்திற்கு மட்டுமின்றி திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. 

The post பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை சுஜிதாவின் வீட்டில் மரணம்.. appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply