முச்சக்கர வண்டி சாரதிக்கு பயணிகளால் காத்திருந்த அதிர்ச்சி – அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி..!

காலி – கரந்தெனிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திவியகஹவெல, பனலிய பிரதேசத்தில் முச்சக்கர வண்டியில் பயணித்த இருவர் சாரதியை கத்தியால் குத்தி பணத்தை கொள்ளை அடித்து சென்றுள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

காயமடைந்த சாரதி எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

நேற்று பிற்பகல் எல்பிட்டிய நகரில் உள்ள தேவாலயத்திற்கு அருகில் உள்ள முச்சக்கர வண்டி தரிப்பிடத்தில் வாடகை வண்டி சாரதியுடன் திவியகஹவெல பிரதேசத்திற்கு செல்வதற்காக குறித்த இருவரும் முச்சக்கர வண்டியில் ஏறியுள்ளனர்.

பிற்பகல் 2 மணி அளவில் முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் திவியகஹவெல, பனலிய பிரதேசத்தில் சாரதியை தாக்கி கத்தியால் காயப்படுத்தி அருகில் உள்ள காணிக்கு அழைத்துச் சென்று பணம் மற்றும் தொலைபேசியை அபகரித்துச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சாரதியின் சட்டையையும் கிழித்த சந்தேகநபர்கள் தப்பியோடிய பின், சாரதி வீதிக்கு வந்து அங்கு பயணித்த ஒருவரிடம் சம்பவத்தை கூறியுள்ளனர்.

இது தொடர்பில் கரந்தெனிய பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது.

பின்னர் காயமடைந்த சாரதி எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

காயமடைந்த நபர் எல்பிட்டிய, கம்பட்டியவத்தை பகுதியைச் சேர்ந்த 62 வயதுடையவர் எனவும், சம்பவம் தொடர்பில் கரந்தெனிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply