பொதுஜன பெரமுனவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வு; அநுரவுக்கும் சந்தர்ப்பம்

 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளரை முன்வைக்கவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளதாக ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் ரணில் விக்ரமசிங்க விரும்பினால் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆனால் ரணில் விக்ரமசிங்க இந்த ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட மாட்டார் என உத்தரவாதம் அளிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அநுர திஸாநாயக்கவுக்கு உதவி செய்து பிரதமர் பதவியை ரணில் விக்ரமசிங்க பெறுவதற்கான சந்தர்ப்பம் இருப்பதாகவும், 

விக்ரமசிங்க இவ்வாறான அரசியல் காழ்ப்புணர்ச்சிகளுக்குப் பழகிவிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியின் பொது வேட்பாளராக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நேற்று அறிவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply