தொண்டையில் மாத்திரை சிக்கி 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழப்பு

 

மஹியங்கனையில் மருந்து மாத்திரை ஒன்று தொண்டையில் சிக்கியதில் நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்த சம்பவம் நேற்று  இடம்பெற்றுள்ளது.

ஓஷதி சவிந்தயா ராஜபக்ச என்ற சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், 

காய்ச்சல் காரணமாக பாட்டி கொடுத்த மாத்திரையொன்று சிறுமியின் தொண்டையில் சிக்கியுள்ளது.

இதனால் மயக்கமடைந்த சிறுமி மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், 

பேராதனை சிறிமாவோ பண்டாரநாயக்க சிறுவர் வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த சிறுமி நேற்று (11) உயிரிழந்துள்ளார். 

 தாய் வெளிநாடு சென்றுள்ளதால் தாத்தா, பாட்டி மற்றும் இரண்டு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

தந்தை அவர்கள் வசிக்கும் வீட்டிற்கு அருகில் உள்ள வேறொரு வீட்டில் வசித்து வருவதாக பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

விசாரணை அறிக்கை கிடைக்கும் வரை மரண விசாரணையை ஒத்திவைக்க திடீர் மரண பரிசோதகர் அமல் ஜயவர்தன நடவடிக்கை எடுத்துள்ளார்.

Leave a Reply