கொழும்பில் அடிகாயங்களுடன் ஆணின் சடலம் மீட்பு..!

கொழும்பில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.

ஒருகொடவத்தை, சேதவத்தை பகுதியில் இருந்து இந்தச் சடலம் மீட்கப்பட்டது.

இன்று அதிகாலை 3 மணியளவில் அந்தப் பகுதியில் சடலம் ஒன்று காணப்படுகின்றது என்று பொலிஸாருக்குத் தகவல் கிடைத்தது. அதையடுத்துப் பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டனர்.

சடலத்தின் தலையில் அடிகாயங்கள் இருப்பதால் மேற்படி ஆண் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் வெளியிட்டனர்.

45 வயதான ஆணின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply