வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்திற்கு புதிய நிர்வாகம் தெரிவு…!

வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தின் பொதுச்சபை கூட்டம் வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று(13)  இடம்பெற்றது.

இதன்போது சங்கத்திற்க்கான புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.

அந்தவகையில் புதிய தலைவியாக சிவானந்தன் ஜெனிற்றா தெரிவுசெய்யப்பட்டதுடன் செயலாளராக துரைசிங்கம் கலாவதியும் பொருளாளராக சர்வேஸ்வரன் கலாராணியும், உபதலைவராக பேரின்பராசா பாலேஸ்வரியும், உபசெயலாளராக பத்மநாதன் சோதிமலர் ஆகியோரும் 11 நிர்வாக உறுப்பினர்களும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நிர்வாகத்தெரிவானது வவுனியா மாவட்டத்தின் பொது அமைப்புக்களான தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம், முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கம், தமிழ் விருட்சம் சமூகஆர்வலர் அமைப்பு, ஜனனம் அமைப்பு ஆகியவற்றின் முக்கியஸ்தர்களின் வழிகாட்டலில் இடம்பெற்றிருந்தது.


Leave a Reply