விபத்தில் சிக்கிய பல்கலை மாணவர்களுடன் சென்ற பஸ்

 

தேசிய வணிக முகாமைத்துவ  பல்கலைக்கழகத்துக்கு மாணவர்களை ஏற்றிச் சென்ற ஹோமாகம டிப்போவுக்குச் சொந்தமான இலங்கை போக்குவரத்துச் சபை பஸ் ஒன்று  இன்று (14)  காலை விபத்துக்குள்ளானது.

குறித்த பல்கலைக்கழகம் அருகே பஸ் கட்டுப்பாட்டையிழந்து ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மதிலின் ஒரு பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தின் போது பஸ்ஸில் பல்கலைக்கழக மாணவர்கள் இருந்த போதிலும், அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை என தெரிவித்த  ஹோமாகம பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply