கப்பம் கேட்டு கொலை அச்சுறுத்தல்…! மேர்வின் சில்வாவின் மகன் பிணையில் விடுதலை…!

மேர்வின் சில்வாவின் மகன் மாலக சில்வா, பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

நபர் ஒருவருக்கு உயிர் அச்சுறுத்தல் விடுத்து, பணம் கோரிய குற்றச்சாட்டு தொடர்பில் அவர் தலங்கம பொலிஸாரால் நேற்று (11) கைது செய்யப்பட்டார்.

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, 

வர்த்தகர் ஒருவரிடம் ஒரு இலட்சம் ரூபா கப்பம் கேட்டு கொலை அச்சுறுத்தல் விடுத்த சம்பவம் தொடர்பாகவே  தலங்கமை பொலிஸாரால் இவர் கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் நீதிமன்றில் ஆயர்ப்படுத்தப்பட்ட  அவரை 5 லட்சம் ரூபாய் பெறுமதியான தலா இரண்டு சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு கடுவலை பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன் மாதந்தோறும் இரண்டாவது மற்றும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைகளில் தங்கம பொலிஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் எனவும் சாட்சியாளர்களை அச்சுறுத்தக் கூடாது எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply