தேர்தல் பிரச்சாரத்திற்கு நாள் குறித்த விமல் அணி…! ஏப்ரலில் முக்கிய அறிவிப்பு…! விமல் அதிரடி…!

பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகயவின்  தேர்தல் பிரச்சார நடவடிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

இந்த வருட இறுதிக்குள் பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தல் என்பன இடம்பெறலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தற்போது தேர்தல்களை இலக்கு வைத்து கூட்டணிகளை அமைக்கும் முயற்சியில் பிரதான கட்சிகள்  இறங்கியுள்ளன.

அதனடிப்படையில் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் தேசிய மக்கள் சக்தி என்பன   பல்வேறு பகுதிகளிலும் தமது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளன.

அதேவேளை பொதுஜன பெரமுன கட்சியும்  தமது தேர்தல் நடவடிக்கை தொடர்பில் தற்போது ஆராய்ந்து  வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில்,  விமல் வீரவன்ச தலைமையிலான உத்தர லங்கா சபாகய,  எதிர்வரும் 23 ஆம் திகதி மஹரகம இளைஞர் சேவைகள் மன்றத்தில் விசேட மக்கள் கூட்டமொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

அத்துடன்,  ஏப்ரல் முதல் வாரத்தில் புதிய கூட்டணி அறிவிக்கப்படும் எனவும்  அவர் தெரிவித்தார்.

Leave a Reply