போத்தல் மூடியினால் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட பெண்! வாடகை அறைக்குள் பயங்கரம்

 

சீதுவ, முத்துவடிய பிரதேசத்தில் உள்ள வாடகை அறை ஒன்றுக்குள் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

26 வயதுடைய பெண் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக கண்டெடுக்கப்பட்ட பெண் பலுகொல்லாகம – மெகொடவெவ பிரதேசத்தில் வசிப்பவர் என தெரியவந்துள்ளது.

நேற்றிரவு (14) திருமணமாகாத இளைஞருடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, குறித்த இளைஞன் போத்தல் மூடியினால் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

மேலும் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளதுடன், சீதுவ பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply