இலங்கையில் நீதிபதிகளுக்கு பற்றாக்குறை – நீதித்துறை கட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு பாதிப்பு!

 

உயர்நீமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலவும் நீதிபதிகளின் வெற்றிடம் அதிகரிக்கின்றமை தொடர்பில் கவலையடைவதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பிரச்சினைகளுக்கு தீர்மானமிக்க முடிவு எட்டப்பட வேண்டும்.

இத்தகைய செயற்பாடானது நீதித்துறை கட்டமைப்பின் செயற்பாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.

இதன்காரணமாக உயர்நீதிமன்ற நீதியரசர்களின் வெற்றிடங்களை விரைவில் நிரப்ப அரசியலமைப்பு பேரவை மற்றும் ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு தேவையான அனைத்து ஆதரவையும் வழங்க தயாராகவுள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

Leave a Reply