வடமராட்சி கடலில் திடீரென கரையொதுங்கிய விசித்திர மிதவை…! அச்சத்தில் மக்கள்…!

யாழ் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியேட்டி கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று(16) காலை கரையொதுங்கியுள்ளது.

குதித்த மிதவையில், “பரமேஸ்வரி என்னை நிம்மதியாக போக விடுங்கள் சகோதரர்களே” போன்ற வாசகங்கள் எழுதப்பட்டுள்ளது.

உயிரிழந்த நபரின் இறுதிச் சடங்கிற்காக இது வடிவமைக்கப்பட்டு கடலில் விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில் குறித்த மிதவையை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாக வடமராட்சி உள்ளிட்ட கடற் பகுதிகளில் பல்வேறு மர்ம பொருட்கள் கரையொதுங்கிவருகின்றமை மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply