'யுக்திய' நடவடிக்கையில் 1067 சந்தேக நபர்கள் கைது…!

கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்ட ‘யுக்திய’ நடவடிக்கையில் 1067 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 984 சந்தேக நபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 83 சந்தேகநபர்கள் உட்பட மொத்தம் 1,067 சந்தேக நபர்கள்  இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, ஹெராயின் 293g774 mg, பனி 269 கிராம் 594mg, கஞ்சா 04 கிலோ 319 கிராம், 672 கஞ்சா செடிகள், மாவா 3 கிலோ 346 கிராம், 1,615 மாத்திரைகள், மதன மோதக 103 கிராம், துல் 19 கிராம் 179 மி.கி என்பன கைப்பற்றப்பட்டுள்ளது.

Leave a Reply