காட்டு யானை தாக்குதலுக்கு இலக்காகி வெளிநாட்டு பிரஜை பலி!

பொத்துவில் சங்கமன்கந்த பிரதேசத்தில் காட்டு யானை தாக்கி வெளிநாட்டு பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த வெளிநாட்டு பிரஜை இன்று (15) காலை சங்கமன்கந்த மணச்சேனி காட்டுப் பகுதியில் காட்டு யானைகளால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் 50 வயதுடைய இத்தாலியர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவர் தங்கியிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொத்துவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மதவாச்சி, லிந்தவெவ பிரதேசத்தில் காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி 61 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் பயிர்ச்செய்கையில் ஈடுபட்டிருந்த போதே அவர் இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

Leave a Reply