யாழில் பொது சுகாதார பரிசோதகர்களின் திடீர் பாய்ச்சல்…! சிக்கிய வர்த்தகர்கள்…!

யாழில் பொது சுகாதார பரிசோதகர்களின் திடீர் சோதனை நடவடிக்கையில் காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ் திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையில் பொது சுகாதார பயிலுநர்கள் இணைந்து திருநெல்வேலி பகுதியில் அமைந்துள்ள பிரபல வர்த்தக நிறுவனங்களை  பரிசோதித்தனர். 

இதன்போது,  காலாவதியான பொருட்கள், வண்டு மொய்த்து பழுதடைந்த பொருட்கள் மற்றும் உரிய விலைகள் இடப்படாத பொருட்கள் என்பனவும் இதன்போது கைப்பற்றப்பட்டது.

அதேவேளை, குறித்த வர்த்தக உரிமையாளர்களுக்கு எதிராக இன்று(18) மேலதிக நீதவான் நீதிமன்றில், பா.சஞ்சீவனால் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன் போது ஒருவர் வருகை தரவில்லை. மற்றையவருக்கு எதிராக 18 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட நிலையில் தண்டப்பணமாக 180,000/= அறவிடப்பட்டதுடன் கடுமையான எச்சரிக்கையும் விடுக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply