கோட்டாபயவின் உடற்பயிற்சி ஆலோசகர் போதைப்பொருளுடன் கைது..!

 

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உடற்பயிற்சி ஆலோசகர்  ஹெரோயின் 

 போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கோட்டாபயவின் உடற்பயிற்சி ஆலோசகர்களில் ஒருவராக பணியாற்றி வந்த முன்னாள் இராணுவ லான்ஸ் கோப்ரல் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டியில் வைத்து குறித்த முன்னாள் இராணுவ உத்தியோகத்தர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் பொலிஸார் வீட்டை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியுள்ளனர்.

இதன்போது சந்தேகநபரின் வீட்டிலிருந்து போதைப்பொருள் மீட்கப்பட்டதாகவும் சந்தேகநபரை கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, கோட்டாபய பதவி விலகியதுடன் குறித்த நபரும் இராணுவத்திலிருந்து விலகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

Leave a Reply