மாபெரும் மரதன் ஓட்ட போட்டி!

கிளி மக்கள் அமைப்பும், நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனமும் இணைந்து நடத்தும் மாபெரும் மரதன் ஓட்டப்போட்டி ஒன்று நெடுந்தீவில் இடம்பெறவுள்ளது.

இம்மாதம் 30ஆம் திகதி (30.03.2024) மாலை 4.30 மணியளவில் நெடுந்தீவில் இடம்பெறவுள்ளது.

சிறந்த ஓட்ட வீர, வீராங்கனைகள் தேர்வு செய்யப்பட்டு தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்குபற்றும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இப்போட்டியின் முதல் மூன்று வெற்றியாளர்களுக்கு சிறப்புச் சான்றிதழ்களும் மரதன் ஓட்டத்தினை நிறைவு செய்த வீரர்களுக்கான சான்றிதழ்களும் முதல் 10 வெற்றியாளர்களுக்கு பரிசில்களும் வழங்கப்படும்.

இம் மரதன் ஓட்டப் போட்டியானது ஆண், பெண் இரு பாலருக்கும் தனித்தனியாக நடைபெறவுள்ளது.

அத்துடன் இப் போட்டியானது 3 மாதங்களுக்கு ஒரு முறை தொடர்டச்சியாக நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

தொடர் பயிற்சியினை மேற்கொள்பவர்கள் உறுதி செய்யப்பட்டு அவர்களுக்கான பாதணிகள் வழங்கப்படும்.

மேலதிக விடயங்களுக்கு நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனத்தின்  0778400534 , 0777395242 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்பினை ஏற்படுத்தி பெற்றுக்கொள்ள முடியும்.

The post மாபெரும் மரதன் ஓட்ட போட்டி! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply