நாணயத்தாள்களை சேதப்படுத்தினால் சிறை..! இலங்கை மக்களுக்கு எச்சரிக்கை

 

இலங்கை நாணயத்தாள்களை சேதப்படுத்துவோருக்கு இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாணயத்தாளை வேண்டுமென்றே உருவச்சிதைத்தல் அல்லது சேதப்படுத்தல் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாணயத்ததாள்களை சேதப்படுத்துவது, தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை மத்திய வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

அவ்வாறான செயற்பாட்டில் ஈடுபடுவோருக்கு மூன்று வருட சிறைத்தண்டனையுடன் பெருந்தொகை அபராதம் விதிக்கப்படும் என மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

Leave a Reply