அகில உலக சூப்பர் ஸ்டாரின் அடுத்த UPDATE

சஞ்சிதா ஷெட்டி, அசோக் செல்வன், பாபி சிம்ஹா, ரமேஷ் திலக், கருணாகரன் என நட்டச்சத்திரங்களின் கூட்டணியில் இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் 2013-ம் ஆண்டு சூது கவ்வும் படம் வெளியானது.; இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சூது கவ்வும் படத்தின் அடுத்த பாகம் உருவாகிறது. சூது கவ்வும் 2 என்று தலைப்பிடப்பட்டு இருக்கும் இந்த படத்தை இயக்குநர் எம்.எஸ். அர்ஜூன் இயக்குகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு மாற்றாக நடிகர் மிர்ச்சி சிவா நாயகனாக நடிக்கிறார் என்ற தகவல்கள் வெளியானது.

இந்நிலையில், சூது கவ்வும் 2 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. வித்தியாசமான முறையில் உருவாகியுள்ள அந்த போஸ்டர் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது

இந்த படத்தை தங்கம் சினிமாஸ் சார்பில் எஸ் தியாகராஜன் மற்றும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் சி.வி. குமார் இணைந்து தயாரிக்கின்றனர்.

Leave a Reply