புத்தளத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி நிகழ்வு..!!

மாற்றுத்திறனாளிகளுக்கான  விளையாட்டுப் போட்டி நிகழ்வொன்று புத்தளம் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கான  விளையாட்டுப் போட்டி நிகழ்வொன்று இன்று காலை புத்தளம் நகரசபை விளையாட்டரங்கில் புத்தளம் மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

குறித்த நிகழ்வு புத்தளம் மாவட்ட செய்லகத்தின் கீழுள்ள 16 பிரதேச செயலகங்களில் உள்ள மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

இதன் போது மாற்றுத்திறனாளிகளுக்கான ஓட்டப் பந்தயம், ஈட்டி எறிதல் குண்டெறிதல் மற்றும் பல போட்டி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

அத்துடன் கை அற்றவர்களுக்கான ஓட்டப் பந்தயம் மற்றும் கால் அற்றவர்களுக்கான ஈட்டி எறிதல் மற்றும் குண்டெறிதல் மற்றும் பல போட்டி நிகழ்வுகள் நடைப்பெற்றன.

குறித்த போட்டி நிகவில் புத்தளம் மாவட்ட அரசாங்க அதிபர் எச்.எம்.எஸ்.பி ஹேரத் கலந்து கொண்டு போட்டியில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதல்கள் மற்றும் பரிசில்களை வழங்கி வைத்தார்.


Leave a Reply