விவசாயப் பொருட்களை வெளிநாட்டிற்கு அனுப்புவதற்கான அனுமதியளிக்கும் நிலையம் யாழில் இன்று(22) திறந்து வைக்கப்பட்டுள்ளது.
மரக்கறி, பழங்கள், பூ விதை வகைகள் , நுண்ணங்கிகள், பூ அலங்காரங்கள் போன்ற தாவர உற்பத்திகளை ஏற்றுமதி செய்வதற்கான அனுமதியளிக்கும் இவ் நிலையத்தை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நாடா வெட்டி திறந்து வைத்தார்.
இதுவரை காலமும் கொழும்பில் இயங்கிய மேற்படி நிலையம் வடபகுதி மக்களின் நன்மை கருதி யாழ்ப்பாணம் தலைமை தபாலகத்தில் புதிதாக நிறுவப்பட்டுள்ளமை குளிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் வடமாகாண ஆளுநர், வடமாகாண பிரதம செயலாளர் மற்றும் தபாலக அதிகாரிகள் உள்ளிட்ட அரச அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.