இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்ட தமிழ் சிவில் பாதுகாப்பு படை வீரரின் உடலம்…!

முல்லைத்தீவில் உயிரிழந்த தமிழ் சிவில் பாதுகாப்பு படை வீரரின் உடலம் இராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் சுதந்திரபுரம் திட்டத்தில் பணியாற்றிய  புதுக்குடியிருப்பு பகுதியை சேர்ந்த 31 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உடல் சுகயீனம் உற்ற நிலையில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்துள்ளார். 
இந்நிலையில் உயிரிழந்த குறித்த குடும்பஸ்தரது இறுதிக்கிரியைகள் கடந்த 20 ஆம் திகதி விசுவமடு பகுதியில் உள்ள சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் சிவில் பாதுகாப்பு திணைக்கள பூரண மரியாதையுடன் நடைபெற்றுள்ளது.
இதில் துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டு சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள் பொதுமக்களின் இறுதி அஞ்சலியுடன் அன்னாரின் உடலம் வெள்ளப்பள்ளம் பொது மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply