வேல்ஸ் இளவரசி விரைவாக குணமடைய வாழ்த்திய ஹரி – மேகன்!

புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள வேல்ஸ் இளவரசி கேட் மிடில்டனுக்கு, இளவரசர் ஹரி மற்றும் மேகன் தம்பதியினர் உடனடியாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு வருத்தம் தெரிவித்துள்ளனர்.

வேல்ஸ் இளவரசி கேட், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளியிட்ட காணொளி பிரித்தானியா மட்டுமன்றி உலகளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

இதனை அறிந்த ஹரி – மேகன் தம்பதி,

ஆரோக்கியத்துடனும் விரைந்து குணமடையவும் கேட் மற்றும் குடும்பத்தினரை வாழ்த்துவதாகவும், அவர்கள் அமைதியாகவும் தனிப்பட்ட முறையிலும் இதை முன்னெடுப்பார்கள் என நம்புவதாகவும் தெரிவித்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள குறிப்பில்,

கடந்த சில வாரங்களாக வேல்ஸ் இளவரசி கேட் வைத்தியசாலையில் இருந்தபோது, தனது நெருக்கமான மற்றும் அன்பான மருமகளுடன் மன்னர் சார்லஸ் தொடர்பில் இருந்ததாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த இக்கட்டான நேரத்தில் ஒட்டுமொத்த குடும்பத்திற்கும் மன்னர் சார்லஸ் மற்றும் ராணி கமீலா தங்களது அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து வழங்குவர் எனவும் குறித்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply