மஸ்கெலியாவில் மதுபான விற்பனை நிலையத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள்…!

மஸ்கெலியா நகரில் பிரதான வீதியில் உள்ள மதுபான விற்பனை நிலையம் இன்று(23)  அதிகாலை 3.30 மணியளவில் உடைக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், CCTV காட்சிகளை அடிப்படையாகக்கொண்டு விசேட பொலிஸ் பிரிவொன்று விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றது.

இன்று மதியம் 2 மணியளவில் ஹட்டன் தலைமை பொலிஸ் நிலையத்தில் இருந்து பொலிஸ் மோப்பநாய் கொண்டு வரப்பட்டு தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கடந்த சில நாட்களுக்கு முன்னரும் மஸ்கெலியா நகரில் உள்ள மரக்கறி விற்பனை நிலையம் உட்பட மூன்று வியாபார நிலையங்கள் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply