
புளத்சிங்கள – மேல் நாரகல பிரதேசத்தில் களுகங்கையில் மூழ்கி ஒருவர் காணாமல் போயுள்ளார்.
சுரேஸ் மதுரங்க என்ற 21 வயது இளைஞன் ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
இன்று மதியம் ஒரு மணியளவில் காணாமல் போன நபர் இரண்டு நண்பர்களுடன் களு கங்கை கரையில் மது அருந்தியுள்ளனர்.
பின்னர் காணாமல் போன நபர் களுகங்கையில் இறங்கி அதன் நடுப்பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது, நீரோட்டத்தில் சிக்கி அவர் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இன்று மாலை கடற்படையினர் காணாமல் போன நபரை தேடும் பணியை ஆரம்பித்தனர்.