மணல் அகழ்வில் ஈடுபட்ட ஆறு பேர் கைது

அம்பன் பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஆறு உழவு இயந்திரங்கள் மருதங்கேணி பொலிசார் மற்றும் விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் ஆறுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்

இன்றைய தினம் விடுமுறை நாளாக இருக்கின்ற போதும் விடுமுறையை கருத்தில் கொள்ளாது சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவேளையே சிறப்பு அதிரடிப்படையினரும், மருதங்கேணி பொலிசாரும் குறித்த ஆறு உழவு இயந்திரங்களுடன் ஆறு நபர்களை கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்டவர்கள் உழவு இயந்திரங்களுடன் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக மருதங்கேணி பொலிஸ் நிலையம் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்

Leave a Reply